நாமக்கல்: பிரசித்திபெற்ற நாமக்கர் ஆஞ்சநேயர் கோவிலின் தலைமை அர்ச்சகர் நாகராஜன்  நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் பிரபலமான கோவில்களில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் தலைமை அர்ச்சகராக இருந்தவர் 55வயதான நாகராஜன். இவர் அந்த பகுதியில் உள்ள நரசிங்க பெருமாள் கோவில் பகுதியில் உள்ள அக்ரஹார வீதியில் வசித்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் தொல்லையால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை குளிக்க பாத்ரூம் சென்றவர் திரும்பி வராத நிலையில், அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் டவலினால் தூக்கி தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.  தான் அணிந்திருந்த துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.