
நாயகி, ரோஜா, மின்னலே, திருமகள், வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்துள்ள நடிகை நக்ஷத்ரா. பல சேனல்களில் ஜோடி நம்பர் 1, சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர், தனது காதலர் ராகவை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியிருந்தார் நக்ஷத்ரா.
இந்நிலையில் தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருக்கும் விஷயத்தை அறிவித்துள்ளார். ’உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டு நிச்சயதார்த்த மோதிரங்களை இருவரும் கையில் வைத்திருக்கும் ப்டத்தைப் பகிர்ந்துள்ளார் நக்ஷத்ரா. அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CKgPJJRHh5m/
Patrikai.com official YouTube Channel