மும்பை:
மாநில சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இப்போது பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முப்பை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடோல் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆசிஸ் தேஷ்முக் கடந்த ஆண்டு மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து, தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில சட்டமன்றத்தின் ஆயுள்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையில் நிலையில், தற்போது தேர்தல் அறிவித்துள்ளது உள்நோக்கம் கொண்டது, வீண் செலவு என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் உயர்நீதி மன்றம் கடோல் சட்டசபை தொகுதி இடைதேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.