ரவுண்ட்ஸ் பாய்:
 
Untitled-2-1
கில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக பொறுப் பாளருமான நடிகை நக்மா இன்னிக்கு சென்னை சத்திய மூர்த்திபவனுக்கு வந்தாங்க. நாம நக்மா ரசிகராச்சா. எடிட்டர்கிட்ட, “நானே இந்த மேட்டரை கவர்  பண்றேன்”னு சொல்லிட்டு கிளம்பினேன்.
நக்மாவ பார்த்ததும் செய்தியாளர்கள் சிலர் அவருகிட்ட ஓடிப்போய் நின்னாங்க. நானும் மூச்சிறைக்க ஓடினேன்.
நக்மாகிட்ட ஒரு செய்தியாளரு,  “காவிரி பிரச்சினை பத்தி என்னா நினைக்கிறீங்க”னு கேட்டாரு. உடனே நக்மா, “என்னப்பா பேசற.. எனக்கு சுவாதி மேட்டர்தான் தெரியும்.. சொல்றேன்”னு ஆரம்பிச்சாங்க.  அப்புறம் ஒரு நிருபரு, “காவிரி பிரச்சினை பத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்குதே.. அதுபத்தி தான் கேட்கிறோம்..”னு விளக்கினாரு.
அதுக்கு நக்மா, “சென்னை வெள்ளத்துல தத்தளிச்சப்போ ம பெங்களூரு கார்பரேஷன் இங்கு வந்து ஹெல்ப் பண்ணுச்சு” என்றார்.
“அதுக்கு இது பதில் இல்லையே…” என்று குழம்பி நின்னாங்க நிருபருங்க.
அப்புறம் நக்மாவே, “இப்போ டமில் நாட்ல என்ன நடக்குது ஐநூறு  டாஸ்மாக் ஷாப் மூட்னாங்களா? எத்தனை__ஃபார்மர் (விவசாயி) சூசைட் பண்ணிக்கிட்டாங்க..  சுவாதிங்கிற  பெண்ணை ஒர்த்தன் வெட்டிகொலை செய்தான், அவனை உடனடியா அரெஸ்ட் பண்ணாங்களா… சொல்லுங்கோ..” என்று செய்தியாளர்களை நோக்கி கேட்டாரு நக்மா.

நக்மா
நக்மா

பொறுத்துப் பார்த்து முடியாமல், “நீங்க பேசறது ஒண்ணுமே புரியலை மேடம். நாங்க கேக்கறது வேற.. நீங்க சொல்றது வேறயா இருக்கு” என்று புலம்பினாங்க. உடனே நக்மா பக்கத்துல இருந்த மகிளா காங்கிரஸ் பெண்மணிகள், “இப்படிப்பேசுங்க.. அப்படி பேசுங்க” என்று எடுத்துக்கொடுத்தாங்க. அவ்வளவுதான். நக்மா டென்சன் ஆயிட்டாங்க.
படபடன்னு வார்த்தைங்கள கொட்டினாங்க.. அது அப்புடியே..
“நான் என்ன இது பத்தி..   அது பத்தி சொல்றது..?   ஐ திங்க.. இது கிரேட்டஸ்ட் இஷ்யூதன் ,  அந்த  டைம்ல ஃப்ளட் டைம்ல யார் ஹெல்ப் பண்ணது. ராகுல் தண்ணியில காலு வச்சி நடந்தாரு. டாஸ்மாக பெரிய இஷ்யூ  500 ஷாப்குளோஸ் பண்றோம்னு  சிஎம் சொன்னாங்க . செஞ்சாங்களா..
விஜயம்
விஜயம்

ஃபார்மர்ஸ் சூசைட் பண்றாங்க..  இது இதுல நான் இன்னா சொல்லோ..  இது இஷ்யூ நாம கமிட்பண்ணமாட்டேங்கிறோம். எவ்ரி ஃபேமிலி மெனி ஆப் ப்ராப்ளம்ஸ்.. ச்சனை இருக்கு ,. நாளைக்கு ஃப்ளட் பிரச்சனைஇருக்கு, சுவாதி பிரச்சனை என்ன ஆச்சு எஜுகேஷன் சரியா இல்லை, பெண்களுக்கு என்ன பாதுகாப்பு. ஒரு சிசிடிவிஇல்லை இது மட்டும் உங்களுக்கு தெரியாது.
அதிமுக , ஆல்  ஃபார்மர்ஸ் ஆர் வெல்த்தினு சொல்றாங்கோ. , வாட்டர் பத்தி யூ டெல்லிங்.  லா அண்ட் ஆர்டர்எப்படி இருக்கு. நான் மகிளா காங்கிரஸ் எங்கிட்ட மகளா பத்தி , லேடீஸ் பத்தி கொஸ்டின் போடுங்க.  காவிரிபிர்ச்சனை பத்தி  வொய் ஆர் யு ஆஸ்கிங்” அப்படின்னு பொறிஞ்சி தள்ளிட்டு கிளம்பிட்டாங்க நக்மா.
மொத்தத்துல நக்மா நடிச்ச படங்களைவிட, அவரோட பத்திரிகையாளர் சந்திப்பு சுவாரஸ்யமா இருந்திச்சு.