அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், நயினார் கோவில் .(பரிகார தலம்)
மூலவர் :: நாகநாதர்., அன்னை: சவுந்தர்யநாயகி. தீர்த்தம்: வாசுகி தீர்த்தம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது.
தல சிறப்பு ::மிகப்பழமையான சிவஸ்தலம்.
உலகில் உள்ள சிவாலயங்களில் இதய தலமாக இருப்பது இந்த நாகநாதர் ஆலயமாகும்.
.
சர்வமத வழிபாட்டுத்தலம்.
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கினால் தோஷம் நீங்கி நிம்மதியாக வாழலாம். மேலும் தோஷத்தினால் ஏற்படும் திருமணத் தடை புத்திரபாக்கியம், தொழில் தொடங்க தடை இவையெல்லாம் நாகநாதரைத் தரிசித்தால் நீங்கும் என்பது ஐதீகம். முகத்தில் திடீரென்று ஏற்படும் பரு கட்டிகள் நீங்கிடவும் பிரார்த்தனை செய்யலாம்.
தலபெருமை::
வடநாட்டைச் சேர்ந்த முல்லாசாகிப் என்பவர் ஊமையான தன் மகளுக்குப் பேச்சு வரவேண்டி ராமேஸ்வரம் சென்றான். பிரார்த்தனை நிறைவேறாததால் மனம் நொந்து வரும் வழியில்
இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடினார்கள். அப்போது திடீரென அந்த ஊமைப்பெண் நயினார்
என கத்தினாள். அவளுக்குப் பேச்சு வந்ததைப் பார்த்த முல்லா, நாகநாதரின் கருணையாலேயே இது நடந்தது என்றார். அன்றிலிருந்து இத்தலம் நயினார் கோவில் என அழைக்கப்படுகிறது.
பிரார்த்தனைக்காக இங்கு பிள்ளையைச் சுவாமிக்குத் தத்து கொடுத்து அதற்குப் பதிலாகத் தவிடு
கொடுத்து பிள்ளையை வாங்கும் வழக்கம் உள்ளது இதனால் குழந்தை நீண்ட ஆயுளோடு வாழும் என்பது நம்பிக்கை.
திரிசங்கு என்ற மன்னன் உயிரோடு சொர்க்கம் செல்ல விரும்பி வசிஷ்டரை அணுகினான். அவர்
மறுக்கவே விசுவாமித்திரரை அனுகினான். அவர் யாகம் மூலமாக சொர்க்கம் அனுப்புவேன் என்று கூறி யாகத்திற்கு வஷிஷ்டரின் ஆயிரம் மகன்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் மறுக்கவே அவர்களை வேடர்களாகும்படி சபித்தார்
விசுவாமித்திரரின் சாபப்படி ஆயிரம் ஆண்டுகள் காட்டில் திரிந்த அவர்கள் இத்தலத்தில் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்,