நாகை: நாகப்பட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு வரும் 16ந்தேதி முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்க உள்ளதால், அதற்கான முன்பதிவு இரவு இன்று தொடங்க உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து செய்ய இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டன. தொடர்ந்து தனியார் நிறுவனம் சார்பில் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதற்கு மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லாததால், அவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போக்கு வரத்து வரும் 16ந்ேதேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.
அதன்படி, நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பலில் செல்ல நள்ளிரவு முதல் முன்பதிவு தொடங்க உள்ளது. சாதாரண வகுப்பு கட்டணமாக ஒருவருக்கு ₹5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு கட்டணமாக ₹7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த படகு வழியாக பயணித்தால் விசா எடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.