மதுரை
தமிழக முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உள்ளது.
காவல்துறை அதிகாரி காதர் பாட்சா உள்ளிட்ட பலர் மீது நெல்லை மாவட்டத்தில் இருந்த பழமையான சிலைகளை விற்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் காதர்பாட்ஷா கைதானார். தன்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்தததாக கூறி அப்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேலுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்ற இதுகுறித்து விசாரிக்கும்படி போ உத்தரவிட்டதன்பேரில் பொன். மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. பொன் மாணிக்கவேல் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து காதர்பாட்ஷா சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இவ்விரு மனுக்கள் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தன.
விசாரணையில் மனுதாரர் மற்றும், சி.பி.ஐ. வழக்கறிஞர்கல் வாதாடினர். நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கு, ஜாமீனில் விடுவிக்கக் கூடிய பிரிவுகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளதா? என்பது தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தீர்ப்புக்காக இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இன்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்கு தினந்தோறும் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு நேரில் சென்று கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.