
தமிழ் சினிமாவில் 80களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் நதியா முக்கியமானவர்.
நதியா டிரஸ், நதியா வளையல், நதியா கம்மல் என அன்றைய இளம் பெண்களிடம் ‘நதியா’ தான் பேஷன் மாடல்.
இந்நிலையில் நதியா இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், 1984ல் அவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்த “நோக்கெதூரத்து கண்ணும் நட்டு” என்ற படத்தில் அவருடன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த சமீர், ஆசிப் ஆகியோருடன் இருந்த அப்போதைய புகைப்படத்தையும், இப்போது அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
[youtube-feed feed=1]