கீரவாணி இசையமைத்த ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடல்கள் பிரிவில் இறுதி ஐந்து பாடல்கள் பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் இந்த பாடலுக்கு இசையமைத்ததற்காக கீரவாணிக்கு ‘கோல்டன் குளோப்’ அவார்ட் கிடைத்தது.

இந்த நிலையில் மார்ச் 12 ம் தேதி ஹாலிவுட்டில் நடைபெற இருக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியின் இறுதிப்பட்டியலில் இந்த பாடலும் இடம்பெற்றுள்ளது.

இதனை அடுத்து இந்தப் படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.