விக்னேஷ் சிவன் இயக்கத்தின் நயன்தாரா நடித்த திரைப்படம் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடையாது . இருப்பினும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இருவரும் வெளிநாடுகளிலும் ஏராளமான சுற்றுலா தளங்களில் சுற்றித் திரிகின்றனர். இவற்றை சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
திருமணத்திற்கு முன்பே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஊர் சுற்றிவருவது விக்னேஷ் சிவன் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் திருமணத்திற்கு நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் .
தற்போது விஜய்யின் 63-வது படத்தில் நயன் கமிட் ஆகியுள்ளார். இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்த நிலையில் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதா நாயகர்களுடன் நடிக்க ஒப்பத்தமாகியுள்ள நிலையில் இந்த திருமண அறிவிப்பு வந்துள்ளது.