டில்லி:
டில்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரயில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சரவணன், எம்.டி. படித்துவந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று தனது அறையில் மர்மமான முறையில் டாக்டர் சரவணன் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சரவணன் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். “மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது” என்று டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.