‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து, ‘பிசாசு 2’ படத்தை இயக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை செப்டம்பர் 20-ம் தேதி வெளியிடவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

இது ‘பிசாசு 2’ அறிவிப்பு என கூறப்படுகிறது. இதனை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், ஆண்ட்ரியா மற்றும் ‘சைக்கோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .