நேப்பியிடா

மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய கட்சி வெற்றி பெற்றது.  ஆனால் தேர்தலில் முறைகேடுகள்  நடத்தி ஆங் சான் சூகி வெற்றி பெற்றதாக கூறி அந்நாட்டு ராணுவம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த ஆட்சியக் கலைத்தது.

பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராடிய மக்களை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. மியான்மர் ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றிய ஜெனரல் மின் ஆங் லைங், ஓராண்டு அவசரநிலை பிறப்பித்தார்.  தற்போது இந்த அவசரநிலை முடிவுக்கு வர உள்ளது.

ஜெனரல் மின் அங் லைங் நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில்,

”மியான்மரில் அமைதி திரும்பவும், ஜனநாயக அமைப்பை உருவாக்கவும், பொதுத் தேர்தல் நடத்தவும் கால அவகாசம் தேவைப்படுகிறது.  எனவே அவசரநிலை மேலும் 6 மாதம் நீட்டிக்கப்படுகிறது,” 

என அறிவித்துள்ளார்.