மியான்மார்:

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ள சீனாவுக்கு, உதவும் வகையில், 200 டன் அரிசியை மியான்மர் நன்கொடையாக அனுப்பியுள்ளது.

நன்கொடை அளிக்கப்பட்ட அரிசி யாங்கோன் பிராந்தியத்தில் உள்ள ஸ்வே பை தார் தொழில்துறை மண்டலத்தில் (4) மியான்மருக்கான சீனாவின் தூதர் சென் ஹையிடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சீனா வர்த்தக துறை துணை அமைச்சர் ஆங் ஹ்டூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மியாமருக்கும் – சீனாவுக்கும் இடையே நீண்ட கால நட்புறவு இருந்து வருகிறது. இதை இரு நாடுகள் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. சீனாவில் எந்த நடந்தாலும் அது எங்கள் நாட்டில் நடந்தது போல கருதி நடவடிக்கை எடுப்பது எங்கள் அரசின் வழக்கம். இந்த நட்புறவின் காரணமாகவே 200 டன் அரிசி அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரில் சீனாவை ஆதரித்ததற்காக, சீனா தூதர் சென் அரசாங்கத்திற்கும் மியான்மார் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். நன்கொடை செய்யப்பட்ட அரிசி ஹூபே மாகாணத்திற்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.