யே பா கியா, மியான்மர்
ரோஹிங்கியா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 28 இந்துக்களின் சடலங்களை கண்டுபிடித்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களில் ஒன்று யே பா கியா. இந்த கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ரோஹிங்கியா தீவிரவாத அமைப்பான அரகன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி எனப்படும் குழுவை சேர்ந்தவர்கள் நுழைந்து பலரை சுட்டு வீழ்த்தி உள்ளனர். பிறகு அவர்களை சிலர் துப்பாக்கி முனையில் காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த தகவலை அங்கு வசிக்கும் இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளால் அழைத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. தற்போது ராணுவத் தலவைர் இணய தளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில், ”ராணுவ வீரர்கள் காடு முழுவதும் தேடி உள்ளனர். அப்போது சுமார் 28 இந்துக்களின் சடலங்களை புதைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ரோஹின்கியா வங்காள தீவிரவாதிகளால் கொடுரமாக சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப் பட்டுள்ளனர்.
ஒவ்வொரு குழியிலும் 10 முதல் 15 சடலங்கள் வரை புதைக்கப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்களில் 20 பேர் பெண்கள், பத்து வயக்குக்குட்பட்ட சிறுவர்கள் ஆறு பேர், இருவர் ஆண்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.