தர்மசாலா,

மாச்சல பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம்  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இருக்கிறார்.

68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 9ந்தேதி  தேர்தல் நடைபெற்றது. அதில் 44 இடங்களை பாஜக கைப்பற்றி, ஏற்கனவே ஆட்சி செய்து வந்த காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

இந்த தேர்தலில் சுயேச்சையாக கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டவர் பிரபல சவூதிவாழ் தொழிலதிபர் பர்காஷ் ராணா என்பவர். கோடீசுவரரான இவர், இமாச்சல பிரதேசம்  ஜோகிந்தர்நகர் தொகுதியில் போட்டியிட்டு அவரை எதிர்த்து நின்ற பாஜகவை சேர்ந்த பாரதியஜனதாவை  சேர்ந்த பிரபலமான குலாப் சிங் தாகூர்-ஐ (இவர் பாஜ எம்.பி.யான அனுராக் தாகூரின் மாமனார்) தோற்கடித்து வெற்றிபெற்றார்.

இவர் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய  இமாச்சல பிரதேச குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்தபோது, வெள்ளநிற ஆடை அணிந்த ஓட்டுநருடன், சமார் 90லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்து இறங்கி  அனைவரின்  கவனத்தையும் ஈர்த்தார்.

இதுகுறித்து கூறிய பரகாஷ் ராணா,   தனது வாழ்க்கையில் முதன்முறையாக விதான் சவுதாவுக்குள் நுழைவதற்காக தான் பெருமைப்படுவதாக கூறினார்.

மேலும், தான் தனது சட்டமன்ற உறுப்பினருக்கான  சம்பளத்தை பெற மாட்டேன் என்றும், எனது சம்பளத்தை “என் தொகுதியினரின் நலனுக்காக செலவிடுவேன்” என்று கூறினார். இது எனது தந்தையின் கனவு என்றும், அதுவே உண்மை என்றும் கூறினார்.‘

மேலும் செய்தியாளர்களின் தொகுதி குறித்த உங்களின் பார்வை எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த ராணா, தொகுதிக்கு ர் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என்றும், ஆனால் அதற்காக தான் சட்டமன்ற அமைப்பின் வேலை பற்றி முதல் முறையாக கற்று கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

“எனது மக்கள் மற்றும் பகுதிகளுக்கு நான் நிறைய அபிலாஷைகளை வைத்திருக்கிறேன், கடந்த பல வருடங்களாக நான் அவர்களுக்காக பணியாற்றி வருகிறேன் என்று கூறினார்.

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு வந்த ராணாவுடன், அவரது கார் ஓட்டுனர் சத்தர் சிங் மிகவும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது,  “நான் கடந்த 21 ஆண்டுகளாக என் முதலாளி உடன் இருக்கிறேன். அவர்  எங்கு செல்கிறாரோ அங்கு அவருடன் நானும் பயணம் செய்வதற்கு என்னை பயன்படுத்திக் கொள்வேன் என்றும், இதுதான் என்  வாழ்வில் விதான்-சபாவில் வந்த முதல் தடவையாக” நுழைகிறேன்  என்று கூறினார்.

சுயேச்சை எம்எல்ஏவான சவூதி வாழ் கோடீசுவரரான ராணா கடந்த 2005ம் ஆண்டு முதல் சவூதிக்கு சென்று தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.