பேசல்

னது வெற்றிக்கு தென் கொரியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் கிம் ஜி ஹ்யுன் காரணம் என பி வி சிந்து தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்ட்ன் போட்டியின் இறுதிச் சுற்றில் கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து இந்திய வீராங்கனை பிவி சிந்து விளையாடி வருகிறார்.   கடந்த இரு ஆண்டுகளாக அவர் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.  இந்த வருடப் போட்டியில் நேற்று அவர் ஜப்பானின் முன்னாள்  உலக சாம்பியன் நோசோமி ஒகுவாராவை 21-7, 21-7 என்னும் செட் கணக்கில் வென்று உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளார்.

இதையொட்டி அவருக்கு உலகெங்கும் உள்ள பாட்மிண்டன் ரசிகர்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர்.   இந்த சாம்பியன் பட்டத்தை இந்த வருடம் சிந்து முதல் முறையாகக் கைப்பற்றி உள்ளார்.  இது குறித்து பி வி சிந்து, “வரும் 2020 ஆம் வருடம் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இது எனக்கு ஒரு முன் அனுபவத்தை அளித்துள்ளது.   ஒலிம்பிக் வெற்றிக்கு என்னை மேலும் ஒரு படி இந்த வெற்றி எடுத்துச் சென்றுள்ளது.

தற்போது தென்கொரியாவைச் சேர்ந்த கிம் ஜி ஹ்யுன் எனக்கு புதிய பயிற்சியாளராக உள்ளார்.  நான் இந்தப் போட்டியில் நன்கு விளையாடி உள்ளேன். நான் அவ்வாறு விளையாடி வெற்றி பெற்றதற்கு எனது புதிய  பயிற்சியாளர் முக்கிய காரணம் ஆவார்.  நான் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இன்று எனது தாயின் பிறந்த நாள் என்பதால் எனது வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.