“இந்த தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் தாலியைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசிய நிலையில் பிரியங்கா காந்தி இவ்வாறு பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் கட்சி மக்களிடம் இருந்து தங்கத்தை அபகரிக்கும், பெண்களின் தாலியை கூட விட்டுவைக்காது என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

யுத்தகாலத்தில் தனது தங்கம் அனைத்தையும் தேசத்திற்காக தந்தவர் இந்திரா காந்தி, இந்த தேசத்திற்காக தாலியை இழந்தவர் என் தாய்

அப்படியிருக்க காங்கிரஸ் கட்சி மீது வதந்தி பரப்புவது மிகவும் கேவலமான செயல்” என்று கூறினார்.