டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல்’, சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும்,  3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்கிறது என்றும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

2025ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. மக்களவை மாநிலங்களவை இணைந்த கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வந்த வந்த குடியரசு தலைவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு  அளிக்கப்பட்டது.   ஜனாதிபதி மாளிகையில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார்.

பாராளுமன்றம் வந்தடைந்த குடியரசு தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  குடியரசு தலைவரை குடியரசு துணை தலைவர், மக்களவை சபாநாயகர், பிரதமர் வரவேற்க,  செங்கோல் முன்னதாக கொண்டு செல்லப்பட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தொடர்ந்து வருகை தந்தார்.

இதைத்தொடர்ந்து, நடப்பாண்டிக்கான பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து  குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

அவரது உரையில்,  நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுப்பதாக மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தவர், 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்கிறத என்றும்,  2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.  விவசாயிகள், பெண்கள் நலன் கருதி மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்றார்

 சில தினங்களுக்கு முன்பு நாட்டில் 76-வது குடியரசு தினத்தை நிறைவு செய்தோம்.  இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்துகிறேன் என்று கூறியதுடன்,   மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என்றவர், “சைபர் பாதுகாப்பில் செயல்திறனை உறுதி செய்வதில் எனது அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றம் மற்றும் டீப்ஃபேக் ஆகியவை சமூக, நிதி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களாக உள்ளன” என்று தெரிவித்தார்.

நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள  புதிய திட்டங்கள் அதிவேகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. * கோடி குடும்பங்களின் இலவச வீட்டுக்கனவு நனவாகி  இருப்பதாக தெரிவித்தவர், லட்சக்கணக்காக மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும்,  மத்திய அரசு மும்மடங்கு வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும்,  பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகள் வங்கிக்கணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேர்வு வினாத்தாள் கசிவுகளை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.