டெல்லி:
கால்வான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்… என ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
“கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதல்களில் 20 இந்தியவீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். அதுபோல சீன தரப்பிலும் உயரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று இரவுதான் இந்திய ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. கால்வான் பள்ளத்தாக்கில் நேருக்கு நேர் சந்தித்தபோது சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட வன்முறை மோதல்களில் அதன் 20 இந்திய வீரர்கள் (Indian soldiers) கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களின் போது கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான சீன துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அறிக்கையில் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். போதுமானது போதும் என்று கூறி, 20 இந்திய வீரர்களின் தியாகத்துக்கு வழிவகுத்த இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி மவுனம் ஏன் என்றும் வினவியிருந்தார்.
அதைத்தொடர்ந்து உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில்,
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ அதிகாரி உள்ளிட்ட வீரர்களின் தியாகம் எனக்குள் ஏற்படுத்தும் வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; இந்த கடினமான காலகட்டத்தில் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்!
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.