மும்பை:

காராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காத வகையில்,  சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் சேர முஸ்லிம்கள் அழுத்தம் கொடுத்தனர் என்று, முன்னாள் முதல்வரும், தற்போதைய அமைச்சருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் சவான் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், அதிகாரப் பகிர்தல் காரணமாக, பல வருடங்களாக நீடித்து வந்த பாஜக, சிவசேனா கூட்டணி முறிந்து, சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம்  நாந்தெட்டில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இதில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், இந்நாள்  பொதுப்பணித்துறை அமைச்சருமான அசோக் சவான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, கடந்த சில ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சியால் மராட்டிய மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டது, மக்களும் கடுமையான துன்பங்களை சந்தித்து வந்தனர், எனவேதான், பாரதிய ஜனதா அரசு அமைத்தை தடுத்து,  மாற்று அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டாம், இது தொடர்பாக தங்களுக்கு முஸ்லிம்கள் மற்றும் சில அமைப்புகள் அழுத்தம் கொடுத்தன என்று கூறினார்.

இதனால்தான்,  எங்களது மிகப்பெரிய எதிரியான பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் ஏற விடாமல் தடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்ததுஆட்சி அமைத்தோம் என்றார். மேலும்,   மதசார்பின்மை தான் நமது அடித்தளம். குடியுரிமை சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு சவான்  பேசினார். அவர் பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து விளக்கம் கொடுத்துள்ள சவான்,  , “நான் முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டு பேசவில்லை. சிவசேனா கூட்டணி அரசில் பங்கேற்குமாறு அனைத்து சமுதாயத்தினரும் வற்புறுத்தினார்கள் என்று தான் பேசினேன்” என்று தெரிவித்து உள்ளார்.