புதுடெல்லி:
முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கட்டாய கருத்தடை செய்ய வேண்டும் என ஹிந்து மகாசபை தலைவர் சாத்வி தேவ தாக்கூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது இந்துக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தடுக்க, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்திய அரசு கருத்தடை செய்ய வேண்டும்.
இந்துக்கள் மக்கள் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். உலகில் பலமுள்ளதாக இந்து மக்கள் தொகை இருக்க வேண்டும்.
ஹரியானாவில் நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைப்பதற்கு என் ஆதரவு உண்டு என்றார்.