அருள்மிகு ஶ்ரீ கற்பூரவல்லி அம்பிகை சமேத ஶ்ரீ சந்திர மவுலீஸ்வரர் திருக்கோயில்,
முசிறி, திருச்சி மாவட்டம்.
நம் இனிய ஈசன், இத்தலத்தில் மூன்றாம் பிறை சந்திரனைத் தலையில் சூடியவராய் அருட்காட்சியளிக்கிறார்.
ஶ்ரீ சந்திர பகவான் சாப விமோசனம் பெற்ற ஈசன் தலங்களில் இந்த முசிறி ஈசனாலயமும் ஒன்று.
ஒரு புராண நிகழ்வின்படி; விநாயகப் பெருமானிடம் சாபம் பெற்ற சந்திரன், சாபம் நீக்கப்பெற இத்தல இறைவனை நினைவில் வைத்து வழிபட, அவருக்கு அருட்காட்சியளித்த இறைவன் சாப விமோசனம் அளித்ததுடன், சந்திரனின் வேண்டுதலை ஏற்று மூன்றாம் பிறையாக தன் தலையில் சூடிக்கொண்டதால் ஶ்ரீ சந்திர மவுலீஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டாராம்.
சோழர்களால் கட்டப்பட்ட இந்த மிகப் பழமையான சிவாலயத்தில், திங்கட்கிழமைகளில், சந்திர திசை, புத்தி, தோஷம் உள்ளவர்களுக்கு (ஆயுள் பலம், மனம் மற்றும் பொருள் பலங்கள் கூட) சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது தலச்சிறப்பு.
மிருகசீரிஷ நட்சத்திரகாரர்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் கற்பூர வல்லியம்பிகையை வழிபடுவது சிறந்த பலன்களை கிடைக்கப் பெறுவார்களாம்.
வைகாசி விசு, ஆனி திருமஞ்சனம், ஆடி பூரம், ஆவணி மூலம், சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா, தை பூசம், மாசி மகம் போன்ற நாட்களில், இறைவனும் இறைவியும் வீதியுலா வருவது காண கண்கொள்ளா திருக்காட்சியாம்.
இத்தல ஈசனுக்கு நடைபெறும், ஐப்பசி அன்னாபிஷேகம் சுற்றுவட்டார ஊர் மக்கள் வெகு திரளாகக் கலந்துகொள்ளும் பிரசித்தமான பெரும்விழாவாம்.