ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரில், மும்பை அணியின் இஷான் கிஷான் 30 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 14 போட்டிகளில் ஆடி இந்த சாதனையை செய்துள்ளார்.
இவருக்கு அடுத்து, ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் 26 சிக்ஸர்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 14 போட்டிகளில் ஆடியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் தலா 25 சிக்ஸர்களுடன், மும்பை அணியின் ஹர்திக் பாண்ட்யாவும், பஞ்சாப் அணியின் நிகோலஸ் பூரானும் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆடியது தலா 14 போட்டிகள்.
நான்காவது இடத்தில் உள்ளவர் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன். இவர் 14 போட்டிகளில் ஆடி 24 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில், கோப்பை வென்ற மும்பை அணி, சிக்ஸர் விஷயத்திலும், பவுலிங் ஆவரேஜ் விஷயத்திலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.