மும்பை
வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் தானே பகுதிகளுக்கு 2 நாட்களுக்குக் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது மும்பையில் பருவ மழைக்காலம் நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் இங்கு மழை ப் எய்து வருகிறது. இதனால் மும்பை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி உள்ளன. இந்த பகுதியில் அநேகமாக அடுத்த மாதம் பருவமழை முடியும் என எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் மேலும் சில நாட்களுக்கு மும்பையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய அறிவிப்பின்படி மும்பை நகரில் இன்று பலத்த மழையும் நாளை மிகவும் பலத்த மழையும் பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று மஞ்சள் எச்சரிக்கையும் நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தானே நகரில் நாளை மிக மிகக் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது இந்த பகுதிக்கு ரெட் அலர்ட் அதாவது சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று பால்கர் மற்றும் தானே பகுதிகளில் கன மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.