மும்பையில் கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள டைம்ஸ் டவர் எனப்படும் 14 மாடிகளை கொண்டு வணிக வளாகத்தின் கட்டடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்து. காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகளவில் தீ பற்றியதால், எட்டு தீயணைப்பு இயந்திரங்களுடன் முயற்சி நடக்கும் நிலையில், கட்டிடத்தின் பின்புறம் உள்ள மூன்றாவது மற்றும் ஏழாவது தளங்களுக்கு இடையே உள்ள மின் குழாயில் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் உளி மற்றும் சுத்தியல்களைப் பயன்படுத்தி பூட்டிய கதவுகளை உடைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அணுகினர். 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. இந்த விபத்தை பெரிய விபத்தாக தீயணைப்புப் படை அறிவித்துள்ளது. இருப்பினும், இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தீயணைப்பு குழுக்களுக்கு சவாலாக இருந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும், தீ விபத்தில் வணிக கட்டிடத்திற்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டிடம் ஏழு தளங்களைக் கொண்டதாக ஆரம்ப அறிக்கைகள் சுட்டிக்காட்டின, ஆனால் அதிகாரிகள் அது 14-அடுக்கு அமைப்பு என்று கூற தகவலைத் திருத்தியுள்ளனர். இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சம்பவம் அங்கு நடைபெற்றது. அப்போது தீயில் சிக்கி 14 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.