மும்பை:

தற்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி வாங்கவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஓட்டல்களுக்கும் அதிக விலை கொடுத்து தக்காளி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ. 120 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையானது. கடந்த சில தினங்களாக இதன் விலை இறங்குமுகமாக உள்ளது. இந்த நிலையில் மும்பையில் 900 கிலோ தக்காளி திருடுபோனதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்:

மும்பை தஹிசார் கிழக்கு பகுதியில் சியாமளா ஸ்ரீவத்சவ் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 900 கிலோ தக்காளியை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ‘‘லாரியில் இருந்து அவரது குடோன் வாசலில் தக்காளி கூடைகளை இறக்கி அடுக்கி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதிகாலை 5 மணிக்கு அவர் தனது ஊழியரை அனுப்பி பார்த்தபோது குடோன் வாசலில் ஒரு தக்காளி கூடை கூட இல்லை.

அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தக்காளி திருடனை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கெ £ண்டனர். ஆனால், மழை மற்றும் கேமரா முன்பு பிளாஸ்டிக் தார் பாய் போட்டு மறைக்கப்பட்டிருந்தால் திருட்டு எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்கப்ப முடியவில்லை’’ என்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.