சென்னை: 14வது ஐபிஎல் சீஸன் முதல் போட்டியில், மும்பை அணியில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் மார்கோ ஜேன்சன் என்பவர் தேர்வு ச‍ெய்யப்பட்டுள்ளார். இவர் பயிற்சி ஆட்டங்களில், விராத் கோலியை திணறச் செய்தவர் என்று கூறப்படுகிறது.

இவர் இன்று மும்பை அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முதல்தர வீரர் ஆவார். இதுவரை சர்வதேச போட்டிகளில் இவர் ஆடியதில்லை.

தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான சர்வதேச தொடரில் தேர்வானாலும் கூட, இவருக்கு ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர்களில் மார்கோ ஜேன்சன் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பவுலிங் செய்துள்ளார். இதில் சிறப்பாக அவர் பவுலிங் செய்தார்.

இந்த பயிற்சி ஆட்டங்களில், கோலியை பலமுறை மார்கோ ஜேன்சன் விக்கெட் எடுத்துள்ளார். முக்கியமாக, கோலி இவரின் பவுலிங்கில் கடுமையாக திணறியுள்ளார். கோலியை குறிவைத்து இவரை அணியில் எடுத்து இருக்கலாம் என்கிறார்கள். தற்போது 20 வயதாகும் இவரின் உயரம் 6.8 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[youtube-feed feed=1]