மும்பை,

மும்பையில் புறநகர் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்புமில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம்  மும்பை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகி உள்ள நிலையில், தற்போது புறநகர் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை தெற்கு பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து பக்கத்து மாவட்டமான ரய்காட்டில் உள்ள கர்ஜத் நகருக்கு செல்லும் சிறப்பு ரெயில் வழக்கம் போல் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் புறப்பட்டு சென்றது.

ஐந்தாவது நடைமேடையில் இருந்து நகர்ந்து சென்றபோது,  அந்த ரெயிலின் உள்ள  பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகிய  சென்றதால் ரெயில்  தடம் புரண்டது.

ரெயில் நிலையம் அருகே குறைவான வேகத்தில் ரெயில் சென்றதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாக அருகிலுள்ள பிளாட்பாரங்களில் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.

[youtube-feed feed=1]