மும்பை

ர்கிடெக்ட் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மும்பை காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர்.

அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிர் இழந்தார்.

அவர் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டுள்ளார்

எனவே ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் எழுந்துள்ளது

இதையொட்டி மும்பை போலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த செய்தி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.