மும்பை: ஹெல்மெட் அணியாத இரு சக்கர வண்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் அதிக விபத்துக்கள் இரு வாகனங்கள் மூலமே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம். ஆனால் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. ஹெல்மட் அணியாதவர்கள் இனிமேல் இருசக்கர வண்டிகளுக்கு பெட்ரோல் போட முடியாது. இந்த அதிரடி திட்டம் ஆகஸ்டு 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக மும்பை போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மும்பை போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் மிலிந் பரம்பே:– இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணிவது கட்டாயமாகும். பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையில் பயணம் செய்வதை உறுதி செய்ய விரும்புகிறோம். எனவே ஹெல்மட் அணியாமல் யாரும் வண்டிக்கு பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் வந்தால் வரும் ஆகஸ்டு 1–ந்தேதி முதல் பெட்ரோல் கொடுக்கப்பட மாட்டாது.
மும்பையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்கு உரிமையாளர்களிடமும் இது பற்றி ஆலோசித்து உள்ளோம். அவர்களும் இதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த மும்பையில் உள்ள ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் 2 போலீசார் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.