மும்பை: 10 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா தொற்றுகள் கொண்ட கட்டிடங்கள் சீல் வைக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பையில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, அங்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா தொற்றுகள் காணப்பட்டால் முழு கட்டிடத்தையும் சீல் வைக்க பிரஹன் மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கொரோனா நிலைமைய மறு ஆய்வு செய்வது பற்றிய கூட்டத்துக்கு பிறகு, பிரஹன் மும்பை மாநகராட்சி திருத்தப்பட்ட நெறிமுறைகளை வெளியிட்டது. முன்னதாக ஒரு குடியிருப்பு வளாகத்தில் கொரோனா இருந்தால் அந்த குறிப்பிட்ட பிளாக் மட்டும் சீல் வைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.
முழு கட்டிடத்திற்கும் சீல் வைக்க தேவையில்லை. திருத்தப்பட்ட நெறிமுறைகளின்படி, ஒரே வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகள் காணப்பட்டால் முழு கட்டிடமும் சீல் வைக்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட தளத்துக்கு சீல் வைப்பது போதுமானதாக இல்லாவிட்டால், கொரோனா பரவுவதைத் தடுக்க அந்தந்த உதவி நகராட்சி ஆணையர் அல்லது மருத்துவ சுகாதார அதிகாரி முழு கட்டிடத்தையும் சீல் வைக்க அழைப்பு விடுக்கலாம்.
ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 14 வரை மும்பையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 1.27 லட்சத்திலிருந்து 1.72 லட்சமாக உயர்ந்தன. இது 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், சீல் செய்யப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 5,631 லிருந்து 8,637 ஆக உயர்ந்துள்ளது. இது 53 சதவீதம் உயர்வாகும்.