மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்  கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்,  வடகிழக்கு பருவமழை மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளிலும்  கனமழை கொட்டித்தீர்த்தது.  கேரளா எல்லையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக,  முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. நேற்று 120 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 126.65 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 17,573 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 4,190 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து வினாடிககு 400 கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்றபோது அணையின் நீர்மட்டம் 126.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 4,190 மில்லியன் கனஅடியாக உள்ளது.

இதன் காரணமாக அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால்,   தேனி மாவட்டம் உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முல்லைப் பெரியாற்றல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த ஐந்து வருடங்களாக இல்லாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.