லக்னோ:
உ.பி. தேர்தலில் முதல்வர் அகிலேஷ் யாதவ் சார்பில் தனி வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருப்பதால் அங்கு சமாஜ்வாடி கட்சி உடையும் சூழல் உருவாகியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும் என முலாயம சிங் அறிவித்தார். இதைத் தொடர்ந்து 393 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார். இந்த பட்டியலில் அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
இதனால் அகிலேஷ் யாதவ் அதிர்ச்சியடைந்தார். அதோடு முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் நேற்றிவு 235 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து முலாயமின் தம்பில சிவ்பால் யாதம் முலாயம் சிங்குடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை விபரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
அகிலேஷ் யாதம் ஆதரவாளரான கட்சியின் பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ் கூறுகையில், முதல்வர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை. அவரை மீண்டும் முதல்வராக பார்க்க கட்சியில் சிலருக்கு விருப்பமில்லை. ஆனால் மக்கள் அகிலேஷ் தான் முதல்வராக வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்றார்.
எனினும் அகிலேஷ் யாதவின் கையெழுத்து இல்லாமவ் வேட்பாளர் பட்டியல் சமூக வளைதளத்தில் வெளியாகியுள்ளது.
முலாயம் சிங் வெளியிட்ட பட்டியலில் பெயர் இடம்பெறாத எம்.எல்.ஏ., இதை வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விபரம் குறித்து பதிலளிக்க முதல்வர் அகிலேஷ் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் மீதமுள்ள 68 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சிவ்பால் நேற்றிரவு அறிவித்தார். ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் சிறு மாற்றம் கூட கிடையாது என்பதை தெளிவுபடுத்த தான் இந்த இறுதி பட்டியலை அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 393 பேருடன் ஜனவரி 1ம் தேதி முலாயம் ஆலோசனை நடத்துகிறார். இதில் முலாயம் உணர்ச்சி பூர்வமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று பாஜ எதிர்பார்த்து காத்திருக்கிறது.