லக்னோ:
போட்டி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார்.
உபி தேர்தலுக்கான 393 வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் வெளியிட்டார். தனது ஆதரவாளர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாதது கண்டு அகிலேஷ் யாதவ் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து தான் தனது தந்தையும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு பரிந்துரை செய்த தனது ஆதரவாளர்கள் பட்டியலை வேட்பாளர் பட்டியலாக வெளியிட்டார். இது முலாயமுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு அவசர ஆலோசனை மேற்கொண்ட முலாயம், அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி அறிவித்துள்ளார். இதனால் சமாஜ்வாடி கட்சி உடையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் உபி அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.