டில்லி,

ந்திய டெலிகாம் சந்தையில் அதிரடி இலவச சலுகையை அறிவித்து களமிறங்கிய ஜியோ அதிக அளவு வாடிக்கையாளர்களை கவர்ந்து முன்னணி நிறுவனமாக உயர்ந்து உள்ளது.

தனது வாடிக்கையாளர்களுக்கு 6 மாதம் இலவச சேவை அளித்ததில் சுமார் 22.5 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது.

ஜியோ அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து,  மார்ச் 31ஆம் தேதி வரையிலான 6 மாத கால வர்த்த கத்தில் ரிலையன்ஸ் ஜியோ 22.5 கோடி ரூபாய்  நஷ்டத்தை அடைந்துள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் வருமான அளவும் 2.25 கோடி ரூபாயில் இருந்து வெறும் 54 லட்ச ரூபாயாகச் சரிந்துள்ளது.

ஆனால், குறைந்த காலகட்டத்தில் ஜியோ  சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த மார்ச் 31ம் தேதியுடன், மற்ற டெலிகாம் நிறுவனங்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக  தனது இலவசங்களை நிறுத்திய ஜியோ,  போட்டி நிறுவனங்களைச் சமாளிக்க புதியதாக தன்தானா தன் ஆஃபரை அறிவித்து மீண்டும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது ஜியோ சேவைக்கு கட்டணம் வசூலிப்பதன் காரணமாக எதிர்காலத்தில்  ஜியோ நிறுவ னத்தின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 500 ரூபாய்க்கு சிஎம்டிஏ செல்போன் அறிவித்து, உலக மொபைல் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரிலையன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.