புதுடெல்லி:
ஆசிய பணக்காரர் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாங் ஷான்ஷனின் பாட்டில் வாட்டர் நிறுவனம் இந்த வாரம் 20 சதவீதம் இழப்பை சந்தித்ததால் அவரது சொத்து மதிப்பு குறைந்தது. இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 5 லட்சத்து 84 ஆயிரம் கோடியாக உள்ளது. இதையடுத்து முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.
Patrikai.com official YouTube Channel