விஜய் சேதுபதி ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ஒரு மணி நேர வெப் திரைப்படம் முகிழ். இந்த படத்தில் ரெஜினா கசண்ட்ரா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

கார்த்திக் ஸ்வாமிநாதன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் புத்தாண்டு நாளன்று வெளியானது.

விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய்சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ள இந்த படத்திற்கு சத்யா பொன்மர் ஒளிப்பதிவு, கோவிந்த ராஜ் படத்தொகுப்பு, ரேவா இசையமைப்பு போன்ற பணிகளை செய்துள்ளனர்.

இந்த நிலையில், முகிழ் படம் வரும் அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் நேரடியாக யூ-டியூப் தளத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது நேரடி திரையரங்க வெளியீடாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]