குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது.
மொஹல் கார்டன் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றியுள்ளது.
பழசை கண்டாலே திரைபோடுவது, தடைபோடுவது என்ற உதறல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அரசு இந்த வார நடவடிக்கையாக இந்த தோட்டத்தின் பெயரை மாற்றியிருக்கிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன..
அம்ரித் உதயான் தோட்டத்தை மக்களின் பார்வைக்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை திறந்து வைக்கவுள்ளார்.
இதனை அடுத்து, ஆங்கிலேயர் ஆட்சிக் கால ஆதிக்க அடையாளங்களை மாற்றும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள மொஹல் தோட்டத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மத ரீதியாக சமூகத்தை பிரிக்கும் செயல் என காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெயர் மாற்றத்தின் மூலம் பிற மதத்தினர் மீது வெறுப்புணர்வை விதைப்பதாகவும், பிரிவினையை தூண்டுவதிலேயே பாஜக அரசு முழுமூச்சாக செயல்பட்டுவருகிறது என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.