பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் மலேசியாவை சேர்ந்த தமிழரான முகென் ராவ் .

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகென் ராவுக்கு என்று தனி ரசிகைகள் பட்டாளமே உருவானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்து விடும் . அபப்டி தான் முகென் ராவை தேடி ஹீரோ வாய்ப்பு வந்துள்ளது. வெப்பம் படம் புகழ் அஞ்சனா அலி கான் இயக்கும் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் முகென் ராவ்.

அஞ்சனா இயக்கும் படத்தில் முகென் ராவுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கிறார்.

முகென் ராவ் நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.