File photo

சென்னை

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதி இன்று தனது 95 ஆம் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

திமுக தலைவரான கருணாநிதிக்கு இன்று 95ஆம் பிறந்த நாள் ஆகும்.   கடந்த சிலவருடங்களாக உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருக்கும் கருணாநிதி தனது கோபாலபுரம் இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.    தமிழகம் எங்கும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.   ஆனால் கருணாநிதி தனது இல்லத்திலேயே எளிய முறையில் பிறந்தநாளைக் கொண்டாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது முதல் மனைவியுடன் அவர் வசித்து வரும் கோபாலபுரம் இல்லமும்,   இரண்டாம் மனைவி வசிக்கும் சிஐடி காலனி இல்லமும்,  மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.    அவரை இன்று கட்சியினரும், பல பிரமுகர்களும் சந்தித்து ஆசி பெற உள்ளனர்.    அத்துடன் அவர் கோபாலபுரம் வீட்டின் வாசலில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]