நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரின் திருமணம் இன்று சென்னையில் நடந்துள்ளது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
ஐஸ்வர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட், அவரது குரல் இளைய தலைமுறை நடிகைகளான ரகுல் ப்ரீத் சிங், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோருக்கு படங்களில் குரல் கொடுத்துள்ளார்.
எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, இன்று காலை தொழிலதிபர் அகுல் என்பவரை மணந்தார்.
முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கோலிவுட் நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, அருண் விஜய், பரத், பிரசன்னா, சினேகா, கவின், சரத்குமார், கருணாஸ், கிரேஸ், டி.ராஜேந்தர், மனோபாலா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.