இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் தோனியும் அவரது ரசிகரும் ஓடிப்பிடித்து விளையாடியது அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. தனது ரசிகனிடம் சிக்காமல் தோனி ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

msd_FAN

இந்தியா – ஆஸ்திரேலியா மோது 2வது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது 40வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் ஆரோன் பின் உட்பட முன்னணி வீரர்கள் மட்டுமே ரன் எடுக்க பிற வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 242 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இன்றைய போட்டியில் 8 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வெற்றிக் கொண்டது.

dhoni

இந்நிலையில், இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, மைதானத்தில் அத்துமீறி தோனியின் ரசிகர் ஒருவர் நுழைந்தார். குழுமி இருந்த வீரர்களுக்கு இடையே புகுந்த அவர் தோனியை நெருங்கியதும், வந்தவர் தன் ரசிகன் என அறிந்து கொண்ட தோனி, வீரர்களுக்கிடையே வேகமாக ஓடினார்.

அவரை துரத்திக்கொண்டு அந்த ரசிகனும் பின்னாடியே ஓடினார். வளைந்து வளைந்து ஓடிய தோனி கடைசியில் ஸ்டெம்பிற்கு அருகே சென்று நின்று, தன் ரசிகானை கட்டிப்பிடித்தார். மைதானத்தில் தோனியின் ரசிகனும், தோனியும் செய்த குறும்பு தனத்தை அனைவர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இருவரும் ஓடி விளையாடிய வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.