புதுடெல்லி:

உலகக் கோப்பை போட்டியில் 4-வது பேட்ஸ்மேனாக டோனி களம் இறங்குவார் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக் காரரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

நீண்ட காலமாகவே 4-வது பேட்ஸ்மேனுக்கான இடம் யாருக்குரியது என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

எம்எஸ்.டோனியை 4-வது   பேட்ஸ்மேனாக இந்திய அணி உருவாக்கிவிட்டது என்பதே என் எண்ணம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியபோதும், தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை வைத்துப் பார்க்கும்போது, 4-வது பேட்ஸ்மேன் என்ற தகுதி டோனிக்கே இருப்பதாக எண்ணுகின்றேன்.

தற்போது டோனி நல்ல ஆட்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸுக்காக 11 போட்டிகளில் விளையாடி 358 ரன்களை எடுத்துள்ளார்.

ஒரு நாள் போட்டியில் 50 ஓவராக இருந்தாலும் டோனி சிறப்பாக விளையாடுவார். பந்து வீச்சாளர்களை திணறடிக்கும் பேட்ஸ்மேன்களில் டோனியும் ஒருவர்.

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கிரிஸ் மோரீஸை புத்திசாலித் தனமாக ஸ்ட்ம்ப் அவுட் ஆக்கினார்.
திறமையான விக்கெட் கீப்பராகவும் டோனி திகழ்கிறார்.

சிறப்பான ஆட்டத்தால் தங்கள் அணியை வெற்றி பெற வைப்பவர்களில் கபில்தேவ், தெண்டுல்கர் வரிசையில் டோனியும் இணைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.