நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்கக் நகரில் உரையாற்றச் சென்ற இடத்தில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தி சரமாரியாக கத்தியால் குத்தினான். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சல்மான் ருஷ்டி அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், ஆங்கில எழுத்தாளர் ஈரான் அதிபரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சல்மான் ருஷ்டி வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளார். அவர்மீது தாக்குதல் நடத்த பலமுறை முயற்சி நடைபெற்றுள்ளது. அதில் இருந்து தப்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உரையாற்ற வந்திருந்தார்.
நிகழ்ச்சியின்போது, அப்போது மேடையில் நின்றிருந்த சல்மான் ருஷ்டியை நோக்கி வந்த மர்மநபர் திடீரென கூர்மையான கத்தியால் சல்மான் ருஷ்டி கழுத்து, முகம், உடம்பு என பல இடங்களில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமைடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதையடுத்து சல்மான் ருஷ்டியை தாக்கிய பயங்கரவாதியை பாதுகாவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவனது பெயர் Hadi Matar. அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்த அவரை ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாக்கிய நபர் குறித்தும் விசாரணை நடக்கிறது..
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சல்மாஷ் ருஷ்டிக்கு வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதுடன், ஒரு கண் பார்வை இழக்கும் அபாயம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவரது ஒரு கையில் நரம்புகள் துண்டிக்கப்பட்டு, கல்லீரலில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.