டெல்லி:
மத்திய சிறுபான்மை விவகார நாடாளுமன்ற குழு கூட்டம் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையில் இன்று கூடியது.
இதில் சமீபகாலமாக விசாரணையின்றி நடைபெறும் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இறந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள எம்பி அன்சாரி வலியுறுத்தினார். இதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து அவ்சாரி உள்ளிட்ட இதர 5 எம்.பி.க்களான எம்.பி.க்கள் முகமது பஷீர் (முஸ்லிம் லீக்), இத்ரீஸ் அலி (திரிணமுல் காங்கிரஸ்), ஜாய் ஆப்ரகம் (கேரளா காங்கிரஸ்) மற்றும் ஷானவாஸ், மவுசன்நூர் (காங்கிரஸ்) ஆகியோர் இக்கோரிக்கையை வலியுறுத்தினர். நிகழ்ச்சி நிரலில் இல்லாத விஷயங்கள் குறித்து விவாதிக்க முடியாது என்று கூறி அமைச்சர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து அன்சாரி மற்றும் இதர 5 எம்.பி.க்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து அன்சாரி கூறுகையில், ‘‘விசாரணையில் இல்லாமல் பல இடங்களில் வன்முறைகும்பலால் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். அதனால் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதில் எவ்வித தவறும் கிடையாது’’ என்றார்.