டெல்லி
எம் பிக்களின் ஊதியம் 24% உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அர்சு எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களுக்கு, வருமான வரி சட்டத்தின் பிரிவு 48-ன் கீழ், செலவு பணவீக்க குறியீடு அடிப்படையில், சம்பளம், தினப்படி, ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. இது, 2023, ஏப்ரல் 1-ந்தேதியை கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது ரூ.1 லட்சம் சம்பளம் பெறும் எம்.பி. ஒருவர் இனி, ரூ.1.24 லட்சம் சம்பள தொகையாக பெறுவார். மேலும் அவருடைய தினப்படி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும்., முன்னாள் எம்.பி.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.31 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக பதவியில் இருந்த எம்.பி.க்களுக்கு, அவருடைய சேவையை கணக்கில் கொண்டு ஒவ்வோர் ஆண்டுக்காகவும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். தவிர, ஆண்டுதோறும் தொலைபேசி மற்றும் இணையதள பயன்பாடு ஆகியவற்றுக்காக எம்.பி.க்களுக்கு கூடுதல் படிகளும் கிடைக்கப்பெறும்.