சாகர்:

றந்துவிட்டதாக கருதி பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்ற 72 வயது முதியவர், திடீரென கண் முழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 72 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய மார்ச்சுவரிக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆயத்தப்பணிகள் நடைபெற்ற நிலையில், அவரது கால்கள் அசைத்துள்ளன. அவரது கண்களும் லேசாக திறந்ததாக கூறப்படு கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவர்களை அழைத்து பரிசோதித்தனர். அப்போது, அந்த முதியவர் உயிருடன் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அடுத்த 90 நிமிடத்தில் மீண்டும் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரோடு இருப்பவரை இறந்ததாக கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த மருத்துவர் களின் அஜாக்கிரதை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு மருத்துவமனை டீன் தெரிவித்து உள்ளார்.