5 மாதங்களுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், இதனை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஓட்டல்கள், மால்கள் போன்றவை திறக்கப்பட்டு வருவதால் தியேட்டர்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ் சினிமா உலகத்தின் அனைத்து அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

சினிமா தியேட்டர்களை திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ள நிலையில், பிரபல விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘’ சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய அரசு என்ன நிபந்தனை விதித்தாலும் அதனை ஏற்க தியேட்டர் உரிமையாளர்கள் தயாராக உள்ளனர். அநேகமாக அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என தெரிவித்தார்.

-பா.பாரதி.