விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்தை அடுத்துள்ள திருக்கோவிலூர் என்கிற கிராமத்தில் அர்ச்சனா, ஈஸா என்கிற இரு குழந்தைகளுடன் வசித்து வந்த தம்பதியினர், தங்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் வாக்குவாதம் முற்றிப்போக, குழந்தைகளை முதலில் கிணற்றில் தள்ளிவிட்டு விட்டு, தாயும் கிணற்றில் குதித்துள்ளார்.
கிணற்றிற்குள் தள்ளிவிடப்பட்ட இரு குழந்தைகளும் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக உயிருக்கு போராடும் நிலையில் தாயார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவலர்கள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.